வரும் 26ல் மின் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம்

கடலூரில், வரும், 26ல் நடக்கும், மின் நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில், திருவண்ணாமலை மாவட்ட மின்நுகர்வோர், பங்கேற்லாம்’ என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சிதம்பரநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; விழுப்புரம் மின் வாரிய மண்டலத்துக்கு உட்பட்ட, மின் நுகர்வோர் பாதுகாப்பு குழுக் கூட்டம், கடலூர் கேப்பர் மலை, 230 கிலோவாட் தானியங்கி துணை மின் நிலைய வளாகத்தில், வரும், 26ல், மாலை, 3:00 மணிக்கு நடக்கிறது. விழுப்புரம் மண்டல மின் வாரிய தலைமைப் பொறியாளர் தலைமை வகிக்கிறார். மேலும், விபரங்களுக்கு, 04142 223132, 223969 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.