வரலாற்றில் இன்று டிசம்பர் 29, 2018

தாமஸ் ஆல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார் – 1891
மங்கோலியா, கிங் வம்சத்திடம் இருந்து விடுதலை பெற்றது – 1911
உலகின் மிகப் பெரிய செப்பினாலான புத்தர் சிலை ஹாங்காங்கில் அமைக்கப்பட்டது – 1993
உலகின் மிகப் பெரிய செப்பினாலான புத்தர் சிலை ஹாங்காங்கில் அமைக்கப்பட்டது – 1993
தாமஸ் ஆல்வா எடிசன் வானொலிக்கான காப்புரிமம் பெற்றார் – 1891
ராபர்ட் புரூஸ் ஃபுட் நினைவு தினம்

இந்தியாவின் பழங்கால வரலாற்றின் தந்தை எனப் போற்றப்படுபவர் ராபர்ட் புரூஸ் ஃபுட் ஆவார் . இவர் சென்னையில் இந்தியப் புவியியல் அளவைத்துறையில் , நிலவியலாளராகப் பணிபுரிந்தார் . இவர் சென்னைக்கு அருகில் பல்லாவரம் மற்றும் அத்திரப்பாக்கம் பகுதிகளில் கல்கோடாரி , முதுமக்கள்தாழி , பானைகள் , கற்கால வெட்டுக் கருவிகளைக் கண்டுபிடித்தார் . இக்கருவிகள் சுமார் 5 முதல் 15 லட்சம் ஆண்டுகள் பழமையானது . இவை ஹோமோ எரக்டஸ் என்னும் மனித இனம் பயன்படுத்தியவை எனத் தெரிய வருகிறது . இந்த அரிய கண்டுபிடிப்பு , பழங்கால மனித இனத்தின் வாழ்க்கை இந்தியத் துணைக் கண்டத்திலும் இருந்தது எனத் தெரிய வந்தது . இவர் இந்தியாவிலேயே இரண்டாவது மிக நீளமான பெலும் குகையைக் கண்டுபிடித்தார் . இவர் 1912 ஆம் ஆண்டு டிசம்பர் 29 அன்று இறந்தார் . இவரின் நினைவு தினத்தை புவியியல் துறை மற்றும் மானிடவியல் துறையில் கடைப்பிடிக்கப்படுகிறது .