தமிழக அரசு துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள்

தமிழக அரசு துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் சுருக்கமாக டி.என்.பி.எஸ்.சி. எனப்படுகிறது. தமிழக அரசு துறைகளில் ஏற்படும் பல்வேறு பணியிடங்களை இந்த அமைப்பு நிரப்பி வருகிறது. தற்போது இந்து சமய அறநிலையத்துறையில் நிர்வாக அதிகாரி (கிரேடு-4) பணிக்கு 65 பேரையும், கிரேடு-3 நிர்வாக அதிகாரி பணிக்கு 55 பேரையும் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 120 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.கிரேடு-4 பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 1-7-2018-ந் தேதியில் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.. வயது வரம்பு தளர்வு பெறும் பிரிவினர் 40 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதளம் வழியாக 3-12-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு 17-2-2019-ந் தேதி நடைபெற உள்ளது.கிரேடு-3 தரத்திலான நிர்வாக அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர் 1-7-2018-ந் தேதியில் 25 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறுபவர்களுக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். இதற்கான எழுத்துத் தேர்வு 16-2-2019-ந் தேதி நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் 3-12-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.இது பற்றிய விவரங்களை www.tnpsc.gov.in. என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

கூட்டுறவுத் துறை

டி.என்.பி.எஸ்.சி. அமைப்பு, கூட்டுறவுத் துறையில் ஜூனியர் இன்ஸ்பெக்டர் பணிக்கு 30 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பிளஸ்-2 படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு பெறுபவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விவரங்களை http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் 21-11-2018-ந் தேதியாகும்.

நகர வடிவமைப்புத் துறை

தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம், கிரேடு 3 தரத்திலான டிராப்ட்ஸ்மேன் பணிக்கு 53 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நகர வடிவமைப்பு திட்டத் துறையில் இந்த பணியிடங்கள் உள்ளன. 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு தளர்வு பெறுபவர்கள் 35 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். டிப்ளமோ சிவில், ஆர்கிடெக்ட் அசிஸ்டன்ட், டவுன்-கண்ட்ரி பிளானிங் டிப்ளமோ படிப்பு படித்தவர்களுக்கு பணிவாய்ப்பு உள்ளது. இது பற்றிய விவரங்களை www.tnpsc.gov.in இணைய தளத்தில் பார்த்துவிட்டு இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 28-11-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும்.

கோர்ட்டில் வேலை

தேனி மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளர், கணினி ஆபரேட்டர், ஜெராக்ஸ் எந்திர ஆபரேட்டர், இரவு காவலாளி, சுகாதார பணியாளர், டிரைவர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 80 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அடிப்படை கல்வி அறிவு பெற்றவர்கள் முதல், பட்டப்படிப்பு வரை பலதரப்பட்ட படிப்புகளை படித்தவர்களுக்கும் பணிகள் உள்ளது. ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. முன்னாள் படைவீரர்கள் 53 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். அந்தந்த பணிக்கான கல்வித்தகுதியை இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, தேனி மாவட்ட நீதிமன்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். 30-11-2018-ந் தேதிக்குள் விண்ணப்பம் சென்றடைய வேண்டும். இது பற்றிய விவரங்களை https://districts.ecourts.gov.in/theni என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.