செய்யாறு அரசுக் கல்லூரியில் ரூ.1.37 கோடியில் கட்டப்பட்ட 5 வகுப்பறைகள் திறப்பு

செய்யாறு அரசுக் கல்லூரியில் ரூ.1.37 கோடியில் கட்டப்பட்ட 5 வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி காணோலிக்காட்சி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.
செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா திட்டத்தின்கீழ், உயர் கல்வித் துறை மூலம் ரூ.1.37 கோடியில் 5 வகுப்பறைகள், ஆய்வகக் கட்டடம் கட்டப்பட்டன.
இவற்றை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திறந்துவைத்தார். அப்போது, புதிய வகுப்பறைக் கட்டடத்தில் கல்லூரி முதல்வர் க.எழிலன் குத்துவிளக்கு ஏற்றி வகுப்பறைகளை தொடக்கிவைத்தார்.