தொடர் மழை எதிரொலி திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தற்போது தெற்கு ஆந்திராவை ஒட்டிய கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. இதையடுத்து, சென்னை மற்றும் வட மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பல மாவட்டங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.

தொடர் மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

மழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து அந்த மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் அறிவித்துள்ளார். இதே போல் வேலூர், திருவாரூர், புதுச்சேரி, நாகை வருவாய் கோட்டம் ஆகியவற்றில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.