வந்தவாசி ஆரணி சாலையில் அமைந்துள்ள மதுபான கடையினால் பொதுமக்களுக்கு இடையூறு

வந்தவாசி ஆரணி சாலையில் அமைந்துள்ள இந்த அரசு மதுபான கடை அப்பகுதியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த மதுபான கடைக்கு பார் வசதி இல்லாத காரணத்தால் சாலையிலேயே மதுபிரியர்கள் மது அருந்துக்கின்றனர். மேலும் அப்பகுதியே கடக்கும் பள்ளிமாணவர்கள் பெண்கள் மிகுந்த அச்சத்துடன் செல்லும் நிலைமையே ஏற்பட்டுள்ளது. கடை திறந்ததிலிருந்து இரவு வரை மிகுந்த கூட்ட நெரிசலுடனே அப்பகுதி காட்சி அளிக்கிறது. அப்பகுதியில் மதுவை குடித்து விட்டு மதுபிரியர்கள் சாலை ஒரங்களில் போதையில் உறங்கி விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அப்பகுதியில் அமைந்துள்ள மதுபான கடை அருகே வந்தவாசி சட்டமன்ற அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் சில அரசுஅலுவலங்கள் உள்ள நிலையில் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை கண்டுகொள்ளபடாத நிலைமையே உள்ளது.