பொன்னூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தின் சார்பில் சிறப்பு கருத்தரங்கம்

வந்தவாசி அடுத்த பொன்னூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தின் சார்பில் “மாணவர்கள் எதிர்நோக்கும் சமூக பிரச்சனைகள்” என்ற சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்ந நிகழ்வுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை திருமதி. மங்கவரதாள் அவர்கள் தலைமை வகித்தார். கிருஷ்ணா கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன், பள்ளி உதவி தலைமை ஆசிரியர் திரு. நந்தகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக, அருவி அறக்கட்டளை நிறுவனர் திரு ஏ.ஜெ. ரூபன் அவர்கள் பங்கேற்று, சமூக நிலைப்பாட்டில் மாணவர்களின் பங்களிப்பை விளக்கி பேசினார். மேலும் முதுகலை ஆசிரியர் சதாசிவம், சமூக ஆர்வலர் சீ.கேசவராஜ், வங்கை கவிஞர் சு.அகிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இறுதியில் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் எஸ். செல்வராஜ் நன்றி கூறினார்