தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின சிறப்பு உரையரங்கம்

வந்தவாசி அடுத்த தெள்ளாறு ராஜா நந்திவர்மன் கலைக் கல்லூரியில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. இந்த விழாவில் கல்லூரி முதல்வர் திரு. ஏழுமலை வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக, திருவண்ணாமலை எழுத்தாளர் ந. சண்முகம் அவர்கள் பங்கேற்று, நுகர்வோர் பாதுகாப்பு முறைமைகள் பற்றி சிறப்புரை ஆற்றினார். மேலும் வந்தவாசி ஸ்ரீ கிருஷ்ணா கோச்சிங் சென்டர் முதல்வர் பா. சீனிவாசன், கலாம் பவுண்டேசன் நிர்வாகி சி. கேசவராஜ் ஆகியோர் உரையரங்கில் பங்கேற்றனர். மேலும் கல்லூரி இயக்குனர்கள் வாழ்த்துரை வழங்கினர். பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.