தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வந்தவாசி கிளை சார்பில், திண்ணை இலக்கிய நிகழ்ச்சி

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வந்தவாசி கிளை சார்பில், திண்ணை இலக்கிய நிகழ்ச்சி வந்தவாசி ஆசியன் மருத்துவ அகாதெமியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கச் செயலர் பேராசிரியர் உ.பிரபாகரன் தலைமை வகித்தார். தக்கண்டராயபுரம் தெருக்கூத்துக் கலைஞர் சுப்பிரமணியன், மாவட்டக்குழு உறுப்பினர் அண்ணாமலை, ஆசியன் மருத்துவ அகாதெமி இயக்குநர் பீ.ரகமத்துல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கப் பொருளாளர் ம.மகாலட்சுமி வரவேற்றார். புரிசை தெருக்கூத்துக் கலைஞர் கண்ணப்ப சம்பந்தன் சிறப்புரை ஆற்றினார். தெள்ளாறு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஏ.பி.வெங்கடேசன், சங்கத் தலைவர் எஸ்.இரவி, துணைத் தலைவர் பூங்குயில் சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவிதை வாசித்தனர்.