கஜா புயலால் பாதிக்கப்பட்டோரின் நிவாரணத்துக்காக தனது சேமிப்பு பணத்தை வழங்கிய பள்ளி மாணவி

கஜா புயலால் பாதிக்கப்பட்டோரின் நிவாரணத்துக்காக வந்தவாசியை சேர்ந்த பள்ளி மாணவி #வெனிஷாபிரபு
தனது சேமிப்பு தொகையான ரூ.11 ஆயிரத்து 900-ஐ வந்தவாசி வட்டாட்சியரிடம் திங்கள்கிழமை வழங்கினார்.
வந்தவாசி ஒத்தைவாடை செட்டித் தெருவைச் சேர்ந்தவர் மருத்துவர் பிரபு. இவரது மனைவி சத்யகன்னி. இவர்களது மகள்  வெனிஷா (7), மேல்மருவத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் கஜா புயலால் பாதிக்கப்பட்டோரின் துயரங்களை ஊடகங்களில் பார்த்த மாணவி வெனிஷா வேதனை அடைந்துள்ளார். இதையடுத்து தனது சேமிப்பு தொகையான ரூ.11 ஆயிரத்து 900-ஐ பாதிக்கப்பட்டோரின் நிவாரணத்துக்கு வழங்க தனது பெற்றோரின் அனுமதியை பெற்றுள்ளார்.
இதை தொடர்ந்து திங்கள்கிழமை பெற்றோருடன் வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்த மாணவி வெனிஷா, தனது சேமிப்பு தொகையான ரூ.11 ஆயிரத்து 900-ஐ வட்டாட்சியர் எஸ்.அரிக்குமாரிடம் வழங்கினார். இதை தொடர்ந்து மாணவி வெனிஷாவை அலுவலக ஊழியர்கள், அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.