கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி

வந்தவாசி நகர தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி பொருள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
வந்தவாசியில் பொதுமக்களிடமிருந்து நிவாரணப் பொருள்கள் நன்கொடையாகப் பெறப்பட்டன. பெறப்பட்ட சுமார் ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான வேட்டிகள், புடவைகள், போர்வை, பாய்கள், பழங்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்கள் மினி டெம்போ மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.