நாட்டுக்கோழி வளர்ப்பு இலவசப் பயிற்சி முகாம்

திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு, திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 13) நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. ஆராய்ச்சி மைய வளாகத்தில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இந்தப் பயிற்சி முகாமில், முதலில் வரும் 50 பேருக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படும்.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள்
இந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், விவரங்களுக்கு 04175 – 206577 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆராய்ச்சி மையத் தலைவர் தியோபிலஸ் ஆனந்தகுமார் தெரிவித்தார்.