திருவண்ணாமலை தீபத் திருவிழா தொடர்பான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம்

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா வரும் புதன்கிழமை (நவம்பர் 14) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வு வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் திருவிழாவுக்கு பல லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தீபத் திருவிழாவுக்கான முன்னேற்பாடு பணிகள், திருவிழா நாள்களில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம் இன்று திங்கள்கிழமை மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பக்தர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்கள், வியாபாரிகள், தொண்டு நிறுவனத்தினர் கலந்து கொண்டு
தங்களது கருத்துகளைத் தெரிவித்தனர்.