சிஎஸ்சி பொது சேவை மையம் மூலம் இலவச கணினிப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா

ஆரணியை அடுத்த தச்சூரில் சிஎஸ்சி பொது சேவை மையம் மூலம் இலவச கணினிப் பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
தச்சூர் கிராமத்தில் மத்திய அரசு திட்டத்தின்கீழ், சிஎஸ்சி பொது சேவை மையம் மூலம் இலவச கணினிப் பயிற்சி முடித்த 250 மகளிருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில், சிஎஸ்சி பொது சேவை மையத்தின் மாநில மேலாளர்கள் கே.வெங்கட்ரமணன், எஸ்.பாஸ்கர், மாவட்ட மேலாளர் சி.சிவக்குமார், மாநில செயல் தலைவர் வினோத்குரியாகோஸ், துணைத் தலைவர் சுபோத்மிஸ்ரா, தச்சூர் சிஎஸ்சி தொழில் முனைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.