இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கான பயிற்சி அளிக்க விரும்பும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தைச் சேர்ந்த 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கான பயிற்சி அளிக்க விரும்பும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
தமிழகத்தில் இயங்கும் அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்பு அளிப்பதற்கான பயிற்சி (Internship Training) வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தப் பயிற்சி ஒவ்வொரு ஆண்டும் 10 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. முதல்கட்டமாக, நிகழாண்டு பயிற்சி வழங்க ரூ.50.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வழங்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டம் மூலம் பயிற்சி வழங்க விரும்பும் சிறு, குறு, நடுத்தர மற்றும் பெரு தொழில் நிறுவனங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உள்ள விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வரும் 31}ஆம் தேதிக்குள் ஆணையர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை, ஆலந்தூர் சாலை, கிண்டி, சென்னை – 600 032 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். மேலும், விவரங்களுக்கு 044 } 22501002, 22501006, 22500900 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.