ஆரணியை அடுத்த குண்ணத்தூர் துணை மின் நிலையத்தில் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஜனவரி 4, 5, 7 மின்சாரம் நிறுத்தம்

ஆரணியை அடுத்த குண்ணத்தூர் துணை மின் நிலையத்தில் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், வெள்ளி, சனி, திங்கள்கிழமைகளில் (ஜனவரி 4, 5, 7) மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
குண்ணத்தூர் துணை மின் நிலையத்தில் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், வெள்ளி, சனி, திங்கள்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குண்ணத்தூர், மேல்நகர், அரியப்பாடி, அக்ராபாளையம், எஸ்.எல்.எஸ்.மில், சோமந்தாங்கல், ஒண்ணுபுரம், மேல்நகர், கீழ்நகர், பி.ஆர்.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுவதாக மின் வாரிய செயற்பொறியாளர் சரஸ்வதி தெரிவித்தார்.