கேரள வெள்ள பாதிப்பு: வந்தவாசி சக்கரவர்த்தி ரெடிமேட் சார்பில் 1 லட்சம் மதிப்புள்ள புதிய ஆடைகள் வழங்கப்பட்டது

கேரள மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை அடுத்து வந்தவாசி சக்கரவர்த்தி ரெடிமேட் உரிமையாளர் இசாக் அவர்கள் ஒரு லட்சம் மதிப்புள்ள புதிய ஆடைகளை வந்தவாசி நகர நிர்வாக அலுவலர் செந்தில் குமார் அவர்களிடம்  வழங்கினார்.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த ஒரு வாரமாக அந்த மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் கனமழை கொட்டி வருகிறது.
இதனால் மாநிலத்தில் உள்ள 35 அணைகளுக்கு வரும் நீர் அப்படியே திறந்து விடப்படுவதால், மாநிலமே வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது.
இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 67 பேர் உயிரிழந்துள்ளதாகவும், லட்சக்கணக்கான மக்கள் உடைமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரலாறு காணாத இந்த வெள்ள பாதிப்பை அடுத்து கேரள மாநிலத்துக்கு உதவிகள் புரிந்திட அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து அம்மாநிலத்துக்கு நிவாரண உதவிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

Share this...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *