வந்தவாசியில் இலவச இசைப் பயிற்சி முகாம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் சார்பில் அம்மையப்பட்டு ஊ.ஒ.ந.நி.பள்ளியில் மாணவர்களுக்கான “தேசபக்தி பாடல்கள்” இலவச இசைப் பயிற்சி முகாம் நடைபெற்றது. இவ்விழாவுக்கு கல்வி மைய முதல்வர் பா. சீனிவாசன் தலைமை வகித்தார். வந்தவாசி வட்டார கல்வி அலுவலர் திரு அ. செல்லப்பன், பள்ளியின் தலைமை ஆசிரியர் க.ஜோதிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பட்டதாரி ஆசிரியர் கே. செந்தில் குமார் வரவேற்றார்.

இசைப்பயிற்சி முகாமை டாக்டர் எஸ். குமார்,(மேனாள் மருத்துவ இணை இயக்குநர்) அவர்கள் தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக,. வந்தவாசி சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் திருமதி. வாசுகி அவர்கள் பங்கேற்று இசைப்புத்தகத்தை வெளியிட்டு, இசையின் சிறப்புகளை விளக்கிப் பேசினார். மேலும் பூங்குயில் இதழ் ஆசிரியர் டி.எல். சிவக்குமார், கவிஞர் தமிழ்ராசா, அரிமா சங்க நிர்வாகி திரு. எட்டியப்பன், செட் இப் பவுண்டேசன் நிர்வாகி சீ. கேசவராஜ் ஆகியோர் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கினர். 


இசைப்பயிற்சியில் *பாரதியார், பாரதிதாசன், காந்தியடிகள், கொடி காத்த குமரன், காமராசர் போன்றவர்களின் பாடல்கள் இசையுடன் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இசைப் பயிற்சியை தெள்ளார் அரசு மகளிர் பள்ளி இசையாசிரியர் திரு டி.பி. வெங்கடேசன் வழங்கினார். பயிற்சியின் இறுதியில் ரெட்கிராஸ் உறுப்பினர் கு. சதானந்தன் நன்றி கூறினார்.

Summary
Share this...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *